புதுவையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக கனமழை பெய்துள்ளதாக IMD பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஃபெஞ்சல் புயல் புதுவைக்கு அருகே நிலைகொண்டுள்ளதாகவும், அது மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணிநேரத்தில் வலுவிழக்கும் என்றும் தெரிவித்தார்.
புதுவையில் அக்.31 2004ல் ஒரே நாளில் 21 செ.மீ மழை பதிவான நிலையில் நேற்று 46 செ.மீ பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.