ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிவாரண உதவி வழங்கியுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து இந்தத் தொகையை கார்த்தி வழங்கினார். முன்னதாக, நடிகர் சிவகார்த்திகேயன் புயல் நிவாரண நிதியாக கடந்த வாரம் ரூ.10 லட்சத்தை கொடுத்தார்.
ஃபெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.