கூட்ட நெரிசலில் 6 பேர் பலியான சம்பவத்திற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் மன்னிப்பு கோரியுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெறுவோரை தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்ட நெரிசல் நேரிட்டது மிகுந்த துரதிருஷ்டவசமானது எனக் குறிப்பிட்டார். அதிகம் கூட்டம் கூடியதே நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.