நாம் தமிழர் கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையிலான செய்தியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாதகவை மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பியுள்ளது.
இதனை அக்கட்சியினர் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று 8.22%
வாக்குகளை பெற்றதால் அதற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.