
இந்த விவகாரத்தில் ஒரு தீர்ப்பு காண நீண்ட சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை 11 பொதுக்குழுவில் தொடங்கி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரை பலகட்டங்களாக மோதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அதிமுக - பாஜக கூட்டணி விஷயம் வேறு உரசலை ஏற்படுத்தி வருகிறது. கடைசியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, அதிமுக பொதுக்குழு செல்லும்.டெல்லி கிளம்பும் எடப்பாடி: நாட்டாமை டூ பங்காளி.. பங்காளி டூ நாட்டாமை! நேரா டீலிங் முடிக்க பிளான்!பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு
ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி கீழமை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக உத்தரவிட்டது. இந்த ஒரு பாயிண்டை பிடித்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.