
பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்த தொடரில் பாபர் அசாம், முகமது ரிஸ்மான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பி.எஸ்.எல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் களமிறங்கியது. சடாப் கான் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு இந்தத் தொடர் ஏமாற்றமாக அமைந்தது.
இந்தத் தொடரின் முதல் போட்டி கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் எளிதாக வெற்றி பெற்றது.