
Personal Assistant Jobs in Delhi High court: டெல்லி உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 60 மூத்த அலுவலக உதவியாளர் (Senior Personal assistant), 67 அலுவலக உதவியாளர் (Personal Assistant) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் 30ம் தேதி வரை பெறப்படும். www.delhihighcourt.nic.in அல்லது recruitment.nta.nic.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலியிட விவரம்: மூத்த அலுவலக உதவியாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்கவேண்டும். கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் சுருக்கெழுத்து செய்ய வேண்டும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.