
MotoGP போட்டிகளை பிரத்தியேகமாக ஜியோ சினிமா, ஸ்போர்ட்ஸ்18 இல் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் ஒப்பந்தத்தை வயகாம்18 நிறுவனம் வென்றுள்ளதை அறிவித்துள்ளது. MotoGP உலக சாம்பியன்ஷிப் என்பது உலகின் மிக உயர்ந்த மோட்டார் சைக்கிள் பந்தயமாகும். இதில் மிகவும் திறமையான ரைடர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். மேலும் இதில் பங்கேற்கும் உலகத்தின் வேகமான முன்மாதிரியான மோட்டார் சைக்கிள்கள் முன்னணி உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படுகிறது. 2023 சீசன் மிகப்பெரிய சாதனையாக 21 பந்தயங்கள் 18 நாடுகளில் நடைபெறுகிறது.
இந்தியாவில் உள்ள MotoGP-ன் 11 அணிகளின் 22 ரைடர்கள் செப்டம்பர் 22 மற்றும் 24ம் தேதி வரை இந்தியாவின் கிராண்ட் பிரிக்ஸிற்காக இந்திய கடற்கரைக்கு வருகிறார்கள். Moto2 மற்றும் Moto3 பந்தயங்கள் உட்பட, இந்திய சுற்றில் 80 ரைடர்கள் மற்றும் 40 அணிகள் மோட்டோர் சைக்கிள் பந்தயத்தில் இடம் பெறுகிறார்கள்.