
உடல் ஆரோக்கியத்திற்கு முட்டை முக்கியமான உணவுப்பொருளாக உள்ளது. அதனால், தான் மருத்துவர்கள் நமது உணவு பழக்கத்தில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர். அவித்த முட்டை பிடிக்காதவர்கள் முட்டை பொரியல், ஆம்லெட், வேகவைத்த மசாலா முட்டை என பல முறைகளில் சமைத்து சாப்பிடுகிறோம்.
அதுவும், ஆம்லெட் என்றால் நம்மில் பலருக்கும் பிடித்த உணவு பொருட்களில் ஒன்று… எப்போது ஹோட்டல்களில் சாப்பிட்டாலும், “அண்ணா, பெப்பர் தூக்கலா ஒரு ஆம்லெட்” என்ற வார்த்தை இல்லாமல் அன்றைய சாப்பாடு முடித்திருக்காது. அப்படி, நீங்களும் ஆம்லெட் பிரியராக இருந்தால் நாங்கள் உங்களுக்கு ஒரு புதிய வகை ஆம்லெட் ரெசிபி பற்றி கூறுகிறோம்.