
சமீபத்தில் சட்டபேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த, அறிவிப்பின்போது அமைச்சர் ஆர்.கே.பன்னீர்செல்வம் “மாப்பிளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையா இருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் சட்டபேரவையில், சிரிப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும், அமைச்சர் கூறிய, மாப்பிள்ளை சம்பா உடலுக்கு ஆரோக்கியமான ஒரு அரிசி வகையாக இருக்கிறது.