
இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கார் விபத்துக்குள்ளாகி படுகாயத்திற்கு ஆளானார். டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சை பெற்றார்.
பின்னர் சில நாள்களில் உயர் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரிஷப் பண்ட்டிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.