
காதலர் தினம் நெருங்கி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்!. காதலர் தினம் வருவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விதமாக காதலர்கள் கொண்டாடுவார்கள். பலரும் மனதிற்கு பிடித்தவர்களுக்காக இன்ப அதிர்ச்சிகள் கொடுப்பது, பரிசுகள் வாங்குவது, வாழ்த்து அட்டைகள் கொடுப்பது என பல்வேறு விதமான மகிழ்ச்சி தரக்கூடிய செயல்களில் ஈடுபட விரும்புவார்கள்.
உங்கள் அன்பிற்குரியவரிடம் நீங்கள் காதல் வயப்பட்டு இருப்பதை தெரிவிக்க இது மிகவும் சரியான ஒரு சமயம் ஆகும். சாதாரண நாட்களில் தெரிவிப்பதை விட இந்த காதலர் தின வாரத்தில் அதுவும் முக்கியமாக ப்ரபோஸ் டே அன்று உங்கள் காதலரிடம் ப்ரபோஸ் செய்வதற்கு மிகவும் சரியான நாளாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் ரோஸ் டே, ப்ரபோஸ் டே, சாக்லேட் டே, ஹக் டே, கிஸ் டே என்ற வரிசையில் காதலர் தினத்தை விமரிசையாக கொண்டாட காதலர்கள் தயாராகி வருகின்றனர்.