
ஸ்டார் திரைப்படங்களுக்குதான் ரசிகர்கள் தற்போதைய சூழலில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் 'ரன் பேபி ரன்' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
இந்த திரைப்படத்திற்கான நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார், தயாரிப்பாளர் லட்சுமன் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய பாலாஜி 'ரன் பேபி ரன்' திரைப்படம் வெளியாகும் போது மிக குறைந்த அளவிலான திரையரங்குகள் தான் ஒதுக்கப்பட்டன. ஆனால் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறினார்.