
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ள , 'உத்தரவாத பென்சன் திட்டத்தின் (Guaranteed Pension Scheme) முன்மொழிவுகளை மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக ஆங்கில நாளிதழான தி இந்தியன் எஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் என்ற அரசுப் பணியாளர்கள்/ சங்கங்களின் கோரிக்கை ஓரளவுக்கு நிறைவேறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஓய்வூதியத் திட்டத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Defined Pension Scheme - பழைய பென்ஷன் திட்டம்), மற்றொன்று பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contribution based Pension Scheme).