
திருப்பூர் மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை கீழ் உள்ள காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பாட்டிற்கு வரும் 27 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் உள்ள மருத்துவர், செவிலியர், பல்நோக்கு மருத்துவ பணியாளர் மற்றும் உதவிப் பணியாளர் ஆகிய பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.