
தங்கலான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக நடிகை மாளவிகா மோகனன் சென்னை வந்தார்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் 1800-களில் நடக்கும் பீரியட் படம் என்றும், பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், தங்கலான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை மாளவிகா மோகனன் இன்று சென்னை வந்தார்.