
EPF விதிகளின்படி, நீங்கள் ஒரு வேலையை விட்டுவிட்டு வேறு ஒரு நிறுவனத்தில் சேரவில்லை என்றாலும், உங்கள் கணக்கில் இருக்கும் தொகை மூன்று ஆண்டுகளுக்கு வட்டியைப் பெறும். எனவே வேலையை விட்டு வெளியேறிய உடனேயே ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கிலிருந்து திரும்பப் பெறுவது என்பது ஒரு புத்திசாலித்தனமான செயலாக இருக்காது. நீங்கள் ஒரு புதிய வேலையைப் பெறத் தவறினால், 36 மாதங்கள் வரை மட்டும் தான் அதாவது 3 வருடங்களுக்கு மட்டும்தான் வட்டி செலுத்தப்படும் அதன் பிறகு வட்டி செலுத்தப்படாது. மேலும் கணக்கு செயலிழந்துவிடும் என்பதால், கடைசி வேலையை விட்டு வெளியேறிய 36-மாத காலம் முடிவதற்குள் நீங்கள் PF பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
EPFO கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பின், புதிய வேலையைப் பெறும் வரை காத்திருந்து, புதிய வேலை கிடைத்தவுடன் அந்த நிறுவனத்தின் கணக்கிற்கு PF பணத்தை மாற்றிக்கொள்ளலாம். ஓய்வூதிய உறுப்பினரைத் தக்கவைத்துக்கொள்ள படிவம் 10C மூலம் நீங்கள் திரும்பப் பெறும் நன்மை அல்லது திட்டச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.