பட்ஜெட் 2023 : ஆண்டுக்கு 10 லட்சம் மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விகிதத்தில் மாற்றம்?

பட்ஜெட் 2023 : ஆண்டுக்கு 10  லட்சம் மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விகிதத்தில் மாற்றம்?

ஒவ்வொரு ஆண்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது நடுத்தர வகுப்பு மக்கள், ஓய்வூதியக்காரர்கள், சம்பள வருமானத்தை நம்பி இருப்பவர்கள், தங்களுக்கு ஏதாவது நன்மைகள் கிடைக்குமா என்று பெரிதும் எதிர்பார்ப்பது உண்டு. அதே போல தற்போதைய வருமான வரி விகிதம் 2014 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்கள் அனைத்துமே நடுத்தர வகுப்பு மக்களின் தேவைகள் மற்றும் நன்மைகளை கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. ஆனால் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வருமான வரியில் மாற்றம் வரும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் நாளை (பிப்ரவரி 01 நடைபெற உள்ள )நிலையில். ஆண்டுக்கு பத்து லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கும் இந்த பட்ஜெட்டில் வருமான வரியில் மாற்றம் கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஸ்க்ரிப்பாக்ஸின் இயக்குனரான பாரத் பதக், “ஆண்டுக்கு பத்து லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வரி அட்டவணையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, 30% இருக்கும் வரி, 25% ஆக குறைக்கப்படலாம். மேலும், முதலீடுகள் மீதான வரி விலக்குக்கான அதிகபட்ச தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று முதலீடு செய்பவர்கள் காத்திருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.