
வாரிசு படத்தின் வெளியீட்டை தொடர்ந்து இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி குடும்பத்துடன் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்தார் .
இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியின் ‘வாரிசு’ / ‘வரசுடு’ திரைப்படம் இந்த மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த குடும்பப் படம் தற்போது உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஜனவரி 11-ஆம் தேதி வெளியானது.