
நடிகர் நாகேஷ் குறித்த இனிமையான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் நடிகர் கமல் ஹாசன். தமிழ் திரையுலக வரலாற்றில் தடம் பதித்த மாபெரும் கலைஞன் நாகேஷின் நினைவு தினம் இன்று. மறைந்த நாகேஷின் 14-வது நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் அவரை நினைவு கூர்ந்துள்ளார். கமல்ஹாசன் எப்போதுமே நாகேஷைப் பற்றியும் அவரது அசாத்தியமான நடிப்புத் திறமையைப் பற்றியும் உயர்வாகப் பேசுவார். அவர்கள் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர், அவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று 'மைக்கேல் மதன காம ராஜன்'.
”மகா கலைஞர் நாகேஷின் நினைவுநாள் இன்று. 50 ஆண்டு காலம் நீடித்த கலைப்பயணத்தில் 1000 படங்களுக்கு மேல் நடித்து நம்மை மகிழ்வித்தவர். எத்தனை புகழ்ந்தாலும் அவற்றை விஞ்சி நிற்கும் ஆகிருதி அவருடையது. என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன்” என்று கமல் ஹாசன் மறைந்த நடிகர் நாகேஷ் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.