
மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற வருகின்றது அதில் முதல் போட்டியான அவனியாபுரத்தில் சுமார் 28 ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியவர் ஜல்லிக்கட்டு வீரர் விஜய். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறங்கி வருகிறார்.
2020 மற்றும் 2021 இல் அவனியாபுரத்தில் இரண்டு பைக்களையும் முதல் பரிசாக தட்டிச் சென்றார் பிறகு 2022 இல் இவருக்கு காலில் ஏற்பட்ட காயங்களால் இவரால் அந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை அந்த ஆண்டுதான் முதன் முதலில் ஜல்லிக்கட்டு காரை பரிசாக அறிவித்தார்கள். அதற்குப் பிறகு இந்த ஆண்டு 2023 அவனியாபுரத்தில் முதல் பரிசாக முதலமைச்சர் சார்பாக கார் ஒன்று அறிவிக்கப்பட்டது.