
'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களை இயக்கி ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'பத்து தல'. இதில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து நடிகர் கௌதம் கார்த்திக்கும் நடிகை பிரியா பவானி சங்கரும் தங்களது டப்பிங் பணிகளை முடித்ததாக தெரிவித்திருந்தனர். தற்போது படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.