
வஞ்சகமும் துரோகமும் நிறைந்த காதல் கதையான பாதி காதல் பாதி துரோகம் வெப்சீரிஸில் கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள். ஆம்னா ஷெரீப், பிரதிபா ரந்தா மற்றும் கௌரவ் அரோரா ஆகியோர் நடிப்பில் இந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற 9 எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸான "ஆதா இஷ்க்" வெப்சிரிஸை தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தமிழில் மொழி பெயர்த்து பாதி காதல் பாதி துரோகம் என்ற பெயரில் ஜனவரி 25 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது. தாயும் அவரது மகளும் ஒரே நபரைக் காதலிக்கும் ஒரு புதிரான காதல் கதைதளத்தை கொண்ட இந்த சிக்கலான காதல் நாடகத்தில், பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. ஜனவரி 25 முதல் இரவு 9 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி அடுத்தடுத்து நடக்கும் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் பார்வையாளர்களை கண்டிப்பாக இருக்கையின் துணியில் கொண்டு செல்லும்.
பாதி காதல் பாதி துரோகம் வெப்-சீரிஸ், தாய் மற்றும் மகளின் வாழ்க்கையில் நடைபெறும் இருவேறு பக்கங்களை நேர்த்தியாக காட்டி பார்வையாளர்களை இருக்கையின் நுணிக்கு ஈர்க்கும் வகையில் மெய்மறக்க செய்யும் அற்புதமான எழுத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.