
சினிமாவுக்கு நிகராக டிவி சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்துவருகிறார்கள். சீரியல் பிரபலங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். காரணம் பிரபலங்களின் பர்சனல் குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் காட்டும் ஆர்வமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான தொடர்களில் ஒன்று கனா காணும் காலங்கள். பலருக்கும் தங்களது நினைவுகளை நினைபடுத்தும் வகையில் இந்தத் தொடர் அமைந்தது. பள்ளிகளில் நமக்கு கிடைத்த அழகிய தருணங்களை இந்தத் தொடர் இயல்பாக பிரதிபலித்தது இதன் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.