
நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் மனக்கசப்பு காரணமாக பேசிக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. விஜய்யின் அனுமதியில்லாமல் அவரது பெயரில் தனிக்கட்சி துவங்க எஸ்.ஏ.சந்திரசேகர் முயற்சித்ததே இருவருக்கும் பிரச்னை ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது. வாரிசு பட இசை வெளியீட்டு விழாவிலும் தனது அப்பா அம்மாவை விஜய் மதிக்காமல் நடந்துகொண்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசியிருக்கிறார். அதில் தனக்கும் விஜய்க்குமான உறவில் விரிசல் இல்லை என்றும் ஒன்றரை வருடத்துக்கு முன் ஏற்பட்ட சிறிய பிரச்னையை மீடியாக்கள் பெரிதுபடுத்துகின்றன என்றும் தெரிவித்தார்.