
ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளிற்கான கணினி வழித் தேர்வு தேதி வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் இரு தினங்களுக்கு முன்னதாக வெளியிட்டது. இந்நிலையில், இந்த அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்று தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் ( 6ம் முதல் 8ம் வகுப்பு) தேர்வு செய்யும் பொருட்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- 2 நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கு தேர்வர்கள் நடத்தப்படுகின்றன. முன்னதாக, 2022 ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, பிப்ரவரி 3,4,5,6,7,8 ஆகிய தேதிகளில் முதற் கட்டமாக நடைபெறும் என்றும், 10,11,12,13,14 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.