
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கியது. இந்தப் படத்தில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படமும் லோகேஷின் எல்சியூ அடிப்படையில் உருவாவதாகக் கூறப்படும் நிலையில் 'கைதி' கார்த்தி , ரோலெக்ஸ் சூர்யா, 'விக்ரம்' கமல் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் கோயம்புத்தூரில் 'மைக்கேல்' பட விழாவில் பங்கேற்ற லோகேஷ் வருகிற பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் தளபதி 67 பட அப்டேட் வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து அப்டேட் வெளிவந்துள்ளது.