
நடிகை மாளவிகா மோகனன் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துவருகிறார். தங்கலான் பட டீசரில் மாளவிகா மோகனின் தோற்றம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா நடித்துவருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மலையாளத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ள 'கிறிஸ்டி' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரபல மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் வயதான பெண்ணை காதலிக்கும் பதின் வயது சிறுவனின் கதை என்று கூறப்படுகிறது.