
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகி 16 நாட்களைக் கடந்தும் குடும்ப பார்வையாளர்களின் ஆதரவால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் உலக அளவில் ரூ.275 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்தப் படம் ரூ.300 கோடி வசூலை எட்டும் கூறப்படுகிறது.
தெலுங்கிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இதனால் மகிழ்ச்சியான விஜய், படக்குழுவினருக்கு சமீபத்தில் விருந்தளித்தார். சென்னையிலும், ஹைதராபாத்திலும் வாரிசு படத்தின் வெற்றியை விஜய் உட்பட படக்குழுவினர் கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.