
ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலெங்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மெல்பர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபெகினாவுடன், சபலெங்கா மோதினார். முதல் செட்டை 6க்கு4 என ரைலெனாவும், இரண்டாவது செட்டை 6-க்கு 3 என சபலெங்காவும் கைப்பற்றினர். வெற்றியை நிர்ணையிக்கும் 3-வது செட்டில் 6-க்கு 4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்திய சபலெங்கா, ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே, மைதானத்தில் விழுந்து ஆனந்த கண்ணீர் விட்டார். மகளிர் ஒற்றையரில் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை சபலெங்கா கைப்பற்றியுள்ளார்.
மகிழ்ச்சி ததும்ப ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை கையில் ஏந்தினார். இதற்கு முன்பு, ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் கிரண்ஸ்லாம் தொடர்களின் இரட்டையர் பிரிவில் சபலெங்கா பட்டம் வெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.