
நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தப் படம் ஒரே நாளில் உலக அளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்துவரும் நிலையில் பதான் திரைப்படம் பாலிவுட்டை சரிவிலிருந்து மீட்கும் வகையில் இருக்கும் என திரை வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
படம் வெளியாவதற்கு முன் இப்படத்திலிருந்து வெளியான பேஷாராம் ரங் என்ற பாடலில் திபீகா படுகோன் காவி நிற பிகினி உடையணிந்திருப்பதாகவும் இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இந்து அமைப்பினரும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் படத்தை திரையிடக் கூடாது என குஜராத் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின.