இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் இயங்குதளம்; சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ‘Bhar os’ ன் சிறப்பு அம்சங்கள் இது தான்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் இயங்குதளம்; சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ‘Bhar os’ ன் சிறப்பு அம்சங்கள் இது தான்!

இன்றைக்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு என்பது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு Android மற்றும் ios ஆகிய ஸ்மார்ட்போன் os களுக்குப் போட்டியாக முற்றிலும் இந்தியாவில் முன்னணி கல்வி நிலையங்களில் ஒன்றான சென்னை ஐஐடி  உருவாக்கப்பட்ட ஒரு os தான் ‘Bhar OS’. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே ஆத்ம நிர்பார் மொபைல் இயங்குதளத்தை உருவாக்கியுள்ளனர் சென்னை ஐஐடி மாணவர்கள். இந்த இயங்குதளத்தின் மூலம் தேவையான ஆப் மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என்றும் பயனர்களுக்கு அதிகப்படியான சுதந்திரம், அதிகாரம், பயண அனுபவம் என அனைத்து வசதிகளும் இந்த இயங்குதளத்தில் உள்ளது.

Bhar OS ன் முக்கிய அம்சங்கள்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த மொபைல் இயங்குதளம் தேவையில்லாத, பாதுகாப்பு இல்லாத எந்த ஒரு ஆப்பையும் இதில் Install முடியாது. அதே சமயம் Bhar OS தானாகவே அப்டேட் ஆகிக்கொள்ளும். இதோடு மட்டுமின்றி OTA மூலம் ஏதாவது அப்டேட் கிடைத்தால் தானாகவே டவுன்லோடு செய்து இன்ஸ்டால் ஆகிவிடும். மேலும் இதில் PASS – Private App store Service மூலம் பாதுகாப்பான ஆப்கள் மட்டுமே இடம் பெறும். பயனர்களுக்கு ஆபத்தான எந்தவொரு புதிய ஆப்களும் இதில் இருக்க வாய்ப்பில்லை.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.