
சம்பளம் பெறும் பணியாளர்கள் இந்தியாவில் வரி செலுத்துவதில் மிகப்பெரிய பங்களிப்பாளர்களாக உள்ளனர். இதன்மூலம், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பாளராக விளங்குகின்றனர். 2022 ஆம் ஆண்டின் மொத்த வருமான வரிக் கணக்கின்படி, 50 சதவீத வரிக் கணக்குகள் ஐடிஆர் 1 மூலம் சம்பளம் பெறும் நபர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சரால் மத்திய பட்ஜெட் 2023 அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, சம்பளம் பெறும் ஊழியர்கள் வரி விலக்குகள் மற்றும் ஸ்லாப் விகிதங்களின் அதிகரிப்பு குறித்து சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றனர்.
2023 மத்திய பட்ஜெட்டில் இருந்து சம்பளம் பெறும் ஊழியர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் உடல்நலப் பாதுகாப்பு, ஓய்வுக்காலம், மகப்பேறு, ஓய்வுக்குப் பிந்தைய பலன்கள், வரிகளில் தளர்வுகள், கடன்களைப் பெறும்போது கூடுதல் சலுகைகள் மற்றும் நிலையான விலக்கு அதிகரிப்பு ஆகியவற்றில் நீண்ட கால பலன்கள் போன்றவை ஆகும். இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.