
வெளி கிரகங்களை பற்றி தெரிந்து கொள்ளும் அதே வேளையில் பூமியின் ரகசிய செயல்பாடுகளை ஒரு புவியியல் ஆய்வு குழுவினர் எப்போதும் ஆராய்ந்து வருகின்றனர். பூமியின் சுழற்சி, அதன் உள்ளே இருக்கும் பொருட்கள், அதன் செயல்பாடுகள் என்று எல்லாவற்றையும் பல ஆண்டுகளாக கவனித்து வருகின்றனர். அப்படி கவனிக்கும் போது பூமியின் உட்கரு சுழற்சி நின்றது தெரிய வந்துள்ளது.
பூமியின் அடுக்குகளை 3 முக்கிய பிரிவுகளாக பிரிப்பர். தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் வாழும் மேற்பரப்பை க்ரஸ்ட் - மேலோடு என்று பிரித்தனர். அதற்கு கீழ் வெப்பம் நிறைந்து பாறைகள் உருகி நெருப்பு பிழம்பாக ஓடும் மாண்டில் பகுதி உள்ளது. நில அதிர்வு, எரிமலை வெடிப்பு ஏற்படும்போது வரும் நெருப்பு குளம்புகள் இங்கு இருந்துதான் வெளிவருகிறது.