
நடிகர் அஜித் குமார் - இயக்குநர் சிவா கூட்டணி வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களில் இணைந்து பணியாற்றியிருந்தார்கள். இதில் விவேகம் படத்தைத் தவிர மற்ற 3 படங்களும் நல்ல வெற்றியைப் பதிவு செய்தன.
வீரம் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'கட்டமராயுடு' என்ற பெயரிலும், கன்னடத்தில் தர்ஷன் நடிப்பில் 'ஒடியா' என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. வேதாளம் திரைப்படம் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் 'போலா ஷங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விஸ்வாசம் பட ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.