
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் "சாருகேசி" நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார் . பின்னர் விரைவில் படமாக்கப்பட உள்ள அந்த திரைப்படம் குறித்த அறிவிப்பையும் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு மேடையில் பேசினார்.