
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிந்த வாரத்தில் விஜய் டிவியின் எண்டர்டெயின்மென்ட ஷோவான குக் வித் கோமாளி சீசன் 3 வருகிற 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. முதல் 3 சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அடுத்த சீசனிற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த சீசன்களில் கோமாளியாக களமிறங்கிய சிவாங்கி, இந்த சீசனில் குக்காக கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனை சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருந்தார். இதில் ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா ஆகியோர் புதிய கோமாளிகளாக அறிமுகமாகியுள்ளனர்.