விவாகரத்து வேணும்பா: மூத்த மகளால் கவலையில் இருக்கும் பிரபலம்

விவாகரத்து வேணும்பா: மூத்த மகளால் கவலையில் இருக்கும் பிரபலம்

இயக்குநர் அவதாரம் எடுத்ததில் இருந்து வெற்றிகரமானவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த பிரமாண்டம். அவர் தன் மூத்த மகளுக்கு பெரிய இடத்து பையனாக பார்த்து திருமணம் செய்து வைத்தார்.

கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருந்ததால் திரையுலகினரை அழைக்க முடியவில்லை. இதையடுத்து பல மாதங்கள் கழித்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அதற்குள் மகள் வீட்டில் பிரச்சனையாகிவிடவே வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்திவிட்டார்.

வரவேற்பு நிகழ்ச்சிக்காக அவர் பல கோடி ரூபாய் செலவு செய்த நிலையில் நின்றுவிட்டது. மாப்பிள்ளை மீது ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளதாம். இனியும் என்னால் இவருடன் சேர்ந்து வாழ முடியாது, விவாகரத்து வேண்டும் அப்பா என மகள் கூறிவிட்டாராம்.

தன் செல்ல மகளின் திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிகிறதே என்று கவலையில் இருக்கிறாராம் பிரமாண்டம். மகளை பொத்தி பொத்தி வளர்த்து கடைசியில் இப்படி ஆகிடுச்சே என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்டாராம்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.