விவாகரத்து முடிவை மாற்றிய தனுஷ்- ஐஸ்வர்யா? வெளியான புதிய தகவல்!

விவாகரத்து முடிவை மாற்றிய தனுஷ்- ஐஸ்வர்யா? வெளியான புதிய தகவல்!

நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை மட்டுமல்லாமல் ரஜினிகாந்த் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர்கள், '' 18 ஆண்டுகளாக நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம். தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டு இருந்தனர்.

விவாகரத்து அவர்களின் தனிபட்ட விஷயம் என்றாலும், இருவரும் இணைந்தே இருக்கலாம் என ரசிகர்கள் விரும்பினர்.  மகன்களுக்காக இருவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் பலர் கோரிக்கை வைத்தனர். அதேசமயம் இருவரும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு தங்களின் வேலை சம்மந்தனாக சென்ற போதும் ஒன்றாகவே தங்கினர் என்று கூறப்பட்டது.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.