காதி பொருட்களை விற்க புதிய யுக்தி.. அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்!

காதி பொருட்களை விற்க புதிய யுக்தி.. அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்!

தமிழ்நாட்டிலுள்ள நெசவாளர்கள் தரமானதும், விலைக் குறைவானதுமான காதி மற்றும் கைத்தறி துணிகளை கண்கவரும் வடிவமைப்புகளுடன் நெய்வதை தொழிலாகக் கொண்டுள்ளனர்.பிற நிறுவனங்கள் பெரும் செலவில் கவர்ச்சிமிகு விளம்பரங்களை செய்து வெளிச்சந்தையில் அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்கின்ற நிலையில் வியாபாரப் போட்டிச் சந்தையில், பல கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளை விற்பனை செய்வதில் சிரமங்கள் உள்ளது. இதனால் நெசவுத் தொழில் செய்வோர்க்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலைவாய்ப்பு வழங்க இயலாததால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறையின் கீழ் நெசவுப் பணி செய்யும் நெசவாளர்களுக்கு கை கொடுத்து உதவும் பொருட்டு, அவர்களால் தயாரிக்கப்பட்ட துணிகள் மற்றும் பொருட்களை, தேசத் தந்தை காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2, 2022 ஞாயிற்றுக்கிழமை இன்று அமெட் பல்கலைக்கழகத்தின் சுமார் 4000 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கலைஞர் கருணாநிதி சாலை மற்றும் இராஜீவ் காந்தி சாலை பகுதிகளில் வீடு வீடாகச் சென்று விற்பனை செய்யவதென்ற ஒரு சமூக சேவைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இத்திட்டத்தின்படி ஒரே நாளில் குறைந்தது ரூ.1 கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளுடன், கிராமப் பொருட்களையும் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.