உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்திற்கு வந்தது புதிய ஆபத்து- உஷாரான ஆர்.எஸ்.எஸ்!

உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்திற்கு வந்தது புதிய ஆபத்து- உஷாரான ஆர்.எஸ்.எஸ்!

இந்த பட்டியல் தற்போது மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த வேண்டும் என்று தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அக்டோபர் 2ஆம் தேதி அன்று ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்த விஷயத்தில் தமிழக போலீசார் எந்தவொரு முடிவும் எடுக்காமல் இருந்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர். அதன்பிறகு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க தமிழக போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடந்த சட்டம், ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இருப்பினும் வழக்கு, விசாரணை ஓயவில்லை.ஜெயலலிதா அறை இடிப்பு?; எடப்பாடிக்கு கடும் எதிர்ப்பு!ஊர்வலம் நடத்தியே தீர வேண்டும் என்று உறுதியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு வரும் நவம்பர் 6ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளை பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக உளவுத்துறை மூலம் எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது. இந்த விஷயம் பொதுமக்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுங்கள் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.