விண்டோஸ் 11 2002 புதிய அப்டேட்டை வெளியிட்ட மைக்ரோசாஃப்ட்.!

விண்டோஸ் 11 2002 புதிய அப்டேட்டை வெளியிட்ட மைக்ரோசாஃப்ட்.!

மைக்ரோசாஃப்ட் உலகம் முழுக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் கணினி இயங்குதளம் ஆகும். என்னதான் உபுண்டு, லினக்ஸ் போன்றவை மைக்ரோசாஃப்ட் உடன் போட்டி போட்டுக் கொண்டு இருந்தாலும், மைக்ரோசாஃப்ட் எப்பொழுதும் முன்னிலையில் உள்ளது. அதற்கு முக்கிய காரணம், விண்டோஸ் இயங்கு தளத்தின் மிக எளிமையான யூசர் இன்டர்ஃபேஸ் மற்றும் அதில் உள்ள வசதிகள் ஆகும். கடைசியாக விண்டோஸ் 10 அறிமுகப்படுத்தப்பட்டபோது இதற்கு மேல் புதிய வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தாது என்று அதன் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. ஆனால் என்ன நினைத்தார்கள் தெரியவில்லை சட்டென்று சென்ற வருடத்தில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 11 வெர்ஷனை களத்தில் இறக்கி விட்டார்கள்.

அந்த வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 11 2002 என்ற புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. சென்ற வருடம் முதன் முதலில் விண்டோஸ் 11 இயங்குதளம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுதான் முதல் முக்கியமான அப்டேட் ஆகும். 22h2 என இந்த புதிய அப்டேட்டிற்கு மைக்ரோசாஃப்ட்-இன் வழக்கமான பாணியில் பெயர் வைக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் மிக எளிமையாக விண்டோஸ் 11 2022 அப்டேட் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தியாவுடன் சேர்த்து கிட்டத்தட்ட 190 நாடுகளில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆட்டோமேட்டிக் அப்டேட் ஆப்ஷன் ஆன் செய்யாதவர்களும் அல்லது இன்னும் புதிய அப்டேட்டை பெறாதவர்களும் இருந்தால் உங்கள் கணினியில் புதிய அப்டேட் காண வசதி வந்து விட்டதா என்பதை அறிய உங்கள் லேப்டாப்பில் அல்லது கணினியில் SETTINGS> SYSTEM> WINDOWS UPDATE என்று இந்த ஆப்ஷனில் சென்று உங்கள் கணினி காண புதிய விண்டோஸ் அப்டேட்டை பெற்றுக் கொள்ளலாம்.

விண்டோஸ் 11 2022 அப்டேட்டில் உள்ள புதிய வசதிகள் என்ன:

இந்த அப்டேட்டில் விண்டோஸ் லெவன் இயங்கு தளத்தின் யூசர் இன்டர் பேஸில் சில மாறுதல்களை புகுத்தியுள்ளது மைக்ரோசாஃப்ட். லே அவுட்டுகள் மற்றும் ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை செய்ய உதவும் விண்டோஸ் மல்டி டாஸ்க்கிங் வசதிக்கான க்ரிட் ஆகியவையும் அறிமுகபடுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் திரையின் மூலைகளில் பல்வேறு விண்டோக்களை ஓபன் செய்து வைத்து வேலை பார்க்கலாம்.

Also Read : கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஜூம் நிறுவனம்.. வெளியானது அதிரடி அறிவிப்பு.!

அமேசான் ஆப் ஸ்டோர் ப்ரிவ்யூ வெர்ஷனை ஏற்கனவே சில நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ள மைக்ரோசாஃப்ட் இந்த புதிய அப்டேட்டின் மூலம் அதனை சர்வதேச அளவில் இன்னும் பல நாடுகளுக்கும் விரிவுபடுத்தி உள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு மூலைகளிலும் உள்ள விண்டோஸ் 11 யூஸர்கள் கிட்டத்தட்ட 20,000 மேற்பட்ட ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை தங்களுடைய கணினியின் வாயிலாகவே பயன்படுத்த முடியும்.

மேலும் சிஸ்டம் வைட் லைஃப் கேப்ஷன் என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் உங்கள் திரையில் பாடல்கள் அல்லது ஏதேனும் வசனங்கள் ஆகியவற்றின் டெக்ஸ்ட் ஃபார்மேட்டினை நேரலையில் உங்களுக்கு ட்ரான்ஸ்கிரிப்ட் செய்து தரும் வசதி கிடைத்துள்ளது. கெஸ்டர் சப்பொர்ட் அப்டேட்டின் மூலம் டேப்லட் யூசர் மற்றும் 2 in 1 டிவைஸ்களில் விண்டோஸ் 11 இயங்குதளத்தை பயன்படுத்துவதற்கு மிக எளிதாக மாற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல் வீடியோ கேம் பிரியவர்களுக்காக புதிய கண்ட்ரோலருடன் கூடிய எக்ஸ்பாக்ஸ் கண்ட்ரோலையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாய்ஸ் ஆக்சஸ் எனப்படும் குரலை பயன்படுத்தி கணினியை கட்டுப்படுத்தும் வசதியில் சில புதிய நரேட்டர்களை சேர்த்துள்ளது. திரையில் உள்ள நோட்டிபிகேஷன் பகுதியில் DND ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மூலம் நீங்கள் விரும்பாத நேரங்களில் தேவையற்ற நோட்டிபிகேஷன் வந்து தொந்தரவு செய்வதை முற்றிலுமாக தடுக்கிறது. ஸ்மார்ட் ஆப் கண்ட்ரோல் என்ற வசதியின் மூலம் இதன் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஆப் கண்ட்ரோலில் உள்ள புதிய செக்யூரிட்டி வசதிகளின் மூலம் சைபர் அட்டாக் மற்றும் ஸ்கிரிப்ட் அட்டாக் மற்றும் தேவையற்ற மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்கள் இயங்குவதை தடுக்க முடியும்.

Also Read : Google Chrome அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்? உடனே இதை செய்யுங்கள்

இது மட்டுமல்லாமல் அடுத்த வருடம் விண்டோஸ் இயங்குதளத்தில் புகைபடங்களுக்கான புதிய ஒரு அப்ளிகேஷனும் வெளியிடலாம் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் நம் கணினியில் உள்ள புகைப்படங்களை முழுவதுமாக நாம் நிர்வகிக்கலாம். கிட்டத்தட்ட மொபைலில் நாம் வைத்திருக்கும் கேலரி போன்று மிக எளிதாக புகைப்படங்களை பார்ப்பதற்கும் அவற்றை வரிசைப்படுத்தவும் முடியும். மேலும் அவற்றை மிக எளிதாக மைக்ரோசாஃப்டின் ஒன் டிரைவ் ஸ்டோரேஜில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அடுத்த மாதத்தில் டாஸ்க் பாருக்கான சில புதிய டிசைன்கள் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் தெரிகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.