\"சனாதனம்\" ஆ ராசாவுக்கு ஆளாளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. எஸ் வி சேகர் யாரை சொல்கிறார்?

\

Chennai

oi-Vishnupriya R

Google Oneindia Tamil News

சென்னை: சனாதனம் குறித்து பேசிய திமுக எம்பி ஆ ராசாவுக்கு ஆளாளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி எம்பி ஆ ராசா ஒரு விழாவில் பேசுகையில் இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா, இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன், இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்.

எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தையும் முறியடிக்கிற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும் முரசொலியும் தி.க.வும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என கடுமையாக விமர்சித்திருந்தார்.

 ஏ வாயை மூடு.. ஆ. ராசா பற்றி கேட்டதும் பதறி எழுந்த ஆதீனம்.. அப்போ ஏ வாயை மூடு.. ஆ. ராசா பற்றி கேட்டதும் பதறி எழுந்த ஆதீனம்.. அப்போ

எம்பி பதவி

எம்பி பதவி

அவரை எம்பி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆ ராசாவை முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் திமுக எம்பி ராசாவின் கருத்து குறித்து எதையும் தெரிவிக்கவில்லை.

ஜாதி

ஜாதி

இந்த நிலையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட எஸ் வி சேகர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் எந்த ஜாதியும் தாழ்ந்த ஜாதி என எதிலும் சொல்லப்படவில்லை. பாதத்திலிருந்து பிறந்தவன் தாழ்ந்த ஜாதி என்கிறார்கள். அது கிடையாது, பாதம் இல்லாவிட்டால் ஒருவனால் நிற்க முடியுமா?

தொழில்களை வைத்துதான் வர்ணாசிரமம்

தொழில்களை வைத்துதான் வர்ணாசிரமம்

தொழில்களை வைத்துதான் வர்ணாசிரமம் வந்ததே தவிர பிறப்பினால் வரவே இல்லை. ஒரு பொய்யை சொல்லிவிட்டு தொடர்ந்து சொல்லும் போது படிக்காதவர்கள் கிட்டயும் ஓட்டு வங்கியாகவும் மாற்றுவதற்கு பேச கூடிய ஒரு விஷயம். எப்போதுமே அரசியலில் ஒரு பிரச்சினையை திசைதிருப்ப மற்றொரு பிரச்சினையை கிளப்புவர்.

மின் கட்டண உயர்வை மறந்தாச்சு

மின் கட்டண உயர்வை மறந்தாச்சு

தற்போது எல்லோருமே மின் கட்டண உயர்வை பற்றி மறந்துவிட்டார்கள். சனாதனத்தை பற்றி பேசிவிட்டார்கள். இந்து மதத்தை பற்றி பேசிவிட்டார்கள் என அதை பற்றித்தான் பேசுகிறார்கள். என்னை பொருத்தவரைக்கும் ஆ ராசாவுக்கு ஆளாளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் தாய் மிகவும் உயர்ந்தவள் என நான் நினைக்கிறேன், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி நமக்கு என்ன இருக்கு என எஸ்வி சேகர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

English summary

BJP Activist S.Ve.Shekher says that People forgets EB tariff hike after Raja's Sanathanam speech.

Story first published: Friday, September 23, 2022, 6:50 [IST]

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.