கோவை பாஜக அலுவலகத்தில் குண்டுவீ்ச்சு..! தொடரும் பதற்றம்..!

கோவை பாஜக அலுவலகத்தில் குண்டுவீ்ச்சு..! தொடரும் பதற்றம்..!

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்படுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரில் ஒப்பணக்கார வீதியில் உள்ள பாரத ஜனதா கட்சியின் அலுவலகத்தில் சற்று முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சால் , இதற்கு காரணமான மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை காந்திபுரம் வி கே கே மேனன் ரோட்டில் பாஜகவின் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது.இந்த அலுவலகத்தின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றார்.

அலுவலகத்தின் முன்பாக விழுந்த பெட்ரோல் குண்டு வெடிக்காததால் எவ்வித சேதம் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீசார் பெட்ரோல் குண்டை கைப்பற்றி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசிய சம்பத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலை வருகிறது. மேலும் பாஜகவினர் அலுவலகம் முன்பு குவிந்த வரும் நிலையில் குண்டு வீச்சுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய படி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.