போனி கபூருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித் ரசிகர்கள்… செய்த சம்பவம் இதுதான்…

போனி கபூருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித் ரசிகர்கள்… செய்த சம்பவம் இதுதான்…

அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. நேற்று இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாக ஏகே 61 என்ற பெயரில் திரைப்படம் அழைக்கப்பட்டு வந்தது.

இந்த படத்தின் டைட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில். நேற்று மாலை 6.30-க்கு படத்தின் டைட்டில் துணிவு என வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தின் டைட்டில் நன்றாக இருப்பதாகவும், அஜித்துக்கு இந்த டைட்டில் மிக பொருத்தமாக இருக்கும் என்றும் ரசிகர்கள், பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து, இன்று செகண்ட் லுக் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போனிகபூர் ட்விட்டர் பதிவில், அஜித் ரசிகர்கள் ஒரு மில்லியன் கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர். அதாவது 10 லட்சம் கமெண்டுகளை போனி கபூரின் ஒரே ஒரு ஸ்டேட்டஸில் அஜித் ரசிகர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

இது இந்திய அளவில் சாதனையாக கருதப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு போஸ்டுக்கு ஒரு மில்லியன் கமென்ட் என்ற ஆச்சரியத்தில், இன்ப அதிர்ச்சியில் போனிகபூர் உள்ளார்.

தற்போது துணிவு படத்தின் படப்பிடிப்பு அடுத்தகட்டமாக தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இத்துடன் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கும், அஜித்தின் துணிவு படத்திற்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் ஐஸ்வர்யா ராய்-த்ரிஷா க்யூட் செல்ஃபி!

துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் படத்தில் ஜான் கோக்கன், ஆரி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வலிமை படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ்ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசை அமைக்கிறார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.