இப்பவே கண்ணை கெட்டுதே: உச்ச நடிகரால் புலம்பும் இயக்குநர்

இப்பவே கண்ணை கெட்டுதே: உச்ச நடிகரால் புலம்பும் இயக்குநர்

இயக்குநர் அவதாரம் எடுத்த வேகத்தில் லீடர் நடிகரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த இளம் இயக்குநருக்கு. அந்த வாய்ப்பை சொதப்பிவிட்டார் இயக்குநர் என்று படம் பார்த்தவர்கள் திட்டித் தீர்த்தார்கள்.

இதையடுத்து உச்ச நடிகரை இயக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. ஆஹா இதுவல்லவோ அதிர்ஷ்டம் என்று சந்தோஷப்பட்டார் இயக்குநர்.

ஆனால் அவர் லீடர் நடிகரின் படத்தை சொதப்பியதை பார்த்த உச்ச நடிகர் உஷாராகி பல கன்டிஷன்களை போட்டிருக்கிறாராம். இது தவிர்த்து தயாரிப்பு நிறுவனமும் இயக்குநருக்கு அவ்வப்போது ஆர்டர் போடுகிறதாம்.

மேலும் உச்ச நடிகரின் நலம் விரும்பிகளும், தம்பி இப்படி பண்ணலாமே என ஐடியா கொடுக்கிறார்களாம்.

ஆளாளுக்கு ஏதாவது சொல்வதால் செம பிரஷரில் இருக்கிறாராம் இயக்குநர். இப்போ தான் படப்பிடிப்பே துவங்கியது, அதற்குள் இம்புட்டு பிரஷரா, கண்ணை கட்டுதே சாமி என புலம்புகிறாராம் இயக்குநர்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படப்பிடிப்பை முடித்துவிட்டால் தான் நிம்மதி என்கிறாராம் இயக்குநர்.

Read more on this article
  Contact Us
  • 8/267, காமராஜர் தெரு, கருங்குளம், தூத்துக்குடி
  • contact@thamizhpathivugal.com
  • + 91 8667251764
  Follow Us
  About

நாம் தமிழனாக பிறந்து இருக்கிறோம் என்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமைக் கொள்ள வேண்டும்.