பாஜகவினர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
X பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வேலூரில் பாஜக நிர்வாகி விட்டல் குமார் கொலை செய்யப்பட்டதையும், அதில் தொடர்புடைய ஊராட்சித் தலைவர் பாலாசேட் கைது செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.