வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் சென்னையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்க்கிறது.
இந்நிலையில், தற்போது சென்னையில் நிமிடத்திற்கு நிமிடம் மழை தீவிரமாகி வருவதால் வாகன ஓட்டிகளால் சாலைகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.